MARC காட்சி

Back
குன்னத்தூர் - வரிச்சியூர் குடைவரை
245 : _ _ |a குன்னத்தூர் - வரிச்சியூர் குடைவரை -
300 : _ _ |a குடைவரை
500 : _ _ |a இந்த குன்னத்தூர் மலையில் கிழக்கில் ஒரு குடைவரை சிவாலயமும் மேற்கே ஒரு குடைவரை சிவாலயமும் என இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. கிழக்கில் உள்ள குடிவரைக் கோயிலில் உள்ள சிவலிங்க வடிவிலான இறைவனுக்கு உதயகிரீசுவரர் எனப் பெயர். குன்றின் கிழக்குப் பகுதியில் சூரியன் உதிப்பதால் சூரியனை நோக்கி கிழக்குப்பகுதி நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் இக்கோயில் உதயகிரீசுவரர் குடைவரைக் கோயில் என்றழைக்கப்படுகின்றது. இந்த குடைவரைக் கோயில் முற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின் போது பாண்டியர்களால் அமைக்கப்பட்டவை.எளிமையான கருவறையில் இலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. வாயில் முகப்பின் இருபுறம் வாயிற்காவலர்கள் நின்றவண்ணம் உள்ளனர். இடதுபுறம் உள்ளர் கையில் தண்டுடன் காட்டப்பட்டுள்ளார். வலதுபுறம் நிற்பவர் கைகளைக் கட்டி பணிவுடன் இறைவன் கருவறையின் காப்பாளானாக உள்ளார். கருவறையின் எதிரே நந்தி அமர்ந்த சநிலையில் காட்டப்பட்டுள்ளது. அர்த்தமண்டபத்தின் தென்புற சுவரில் கணபதி உருவம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
510 : _ _ |a தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
520 : _ _ |a மதுரை மாநகரில் உள்ள குடைவரை கோயில்களில் ஒன்று அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில். இது பாண்டியர்களால் ஏறக்குறைய கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது. மதுரையிலிருந்து சிவகங்கைக்குச் செல்லும் பாதையில் வரிச்சியூர் அருகே குன்னத்தூர் எனும் சிற்றூர் உள்ளது. முற்காலப் பாண்டியர் காலத்தில், அதாவது கி.பி 8-10ம் நூற்றாண்டு வாக்கில் இந்த ஊர் குன்றத்தூர்க் குளக்கீழ் என்ற நாட்டின் பிரிவுக்குட்பட்ட பிரம்மதேய கிராமமாக விளங்கியது. இன்று குன்னத்தூர் மலை என இப்பகுதி அழைக்கப்படுகின்றது. இங்கு அஸ்தகிரீசுவரர் என்ற பெயரில் மேற்கு நோக்கியதாக குடைவரை ஒன்று முற்காலப் பாண்டியர்களால் குடைவிக்கப்பட்டது. எளிமையான குடைவரைக் கோயிலாக இது விளங்குகிறது.
653 : _ _ |a தமிழ்நாடு, குடைவரை, குடவரை, குடைவரைக் கோயில்கள், தென்னகக் குடைவரைகள், தமிழ்நாட்டு குடைவரைக் கோயில்கள், பாண்டியர் குடைவரைகள், குகை, குகைக் கோயில், குன்னத்தூர், வரிச்சியூர், சிவகங்கை, சிவகெங்கை,சிவகங்கை மாவட்ட மரபுச் சின்னங்கள், சிவகங்கை மாவட்ட குடைவரைகள், வரிச்சியூர் குடைவரை, வரிச்சியூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை, அஸ்தகிரீசுவரர் சிவன் குடைவரை, குன்னத்தூர் குடைவரைகள் மரபுச் சின்னம், தொல்லியல் சின்னம், தமிழக வரலாற்றுச் சின்னங்கள், தமிழகத் தொல்லியல்
752 : _ _ |a அஸ்தகிரீசுவரர் கோயில் |c குன்னத்தூர் |d சிவகங்கை |f திருப்பத்தூர்
906 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 9.9117453073047
915 : _ _ |a 78.256202423299
934 : _ _ |a வரிச்சியூர் பிராமிக் கல்வெட்டு, வரிச்சியூர் உதயகிரீசுவரர் கோயில், குன்னத்தூர் மலைக்கோயில்
995 : _ _ |a TVA_MON_00099
barcode : TVA_MON_00099
book category : குடைவரைக் கோயில்கள்
cover :
Primary File :

TVA_MON_00099/TVA_MON_00099_சிவகங்கை_வரிச்சியூர்_குடைவரைக்-கோயில்-0001.jpg

TVA_MON_00099/TVA_MON_00099_சிவகங்கை_வரிச்சியூர்_குடைவரைக்-கோயில்-0002.jpg

TVA_MON_00099/TVA_MON_00099_சிவகங்கை_வரிச்சியூர்_குடைவரைக்-கோயில்-0003.jpg

TVA_MON_00099/TVA_MON_00099_சிவகங்கை_வரிச்சியூர்_குடைவரைக்-கோயில்-0004.jpg